கோரையாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைச்சர் பொன்முடி தகவல்


கோரையாற்றின் குறுக்கே  ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம்  அமைச்சர் பொன்முடி தகவல்
x
தினத்தந்தி 8 May 2022 10:38 PM IST (Updated: 8 May 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

கோரையாற்றின் குறுக்கே ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்டப்பாலம் அமைச்சர் பொன்முடி தகவல்


திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாரங்கியூருக்கும், ஏனாதிமங்கலத்துக்கும் இடையே உள்ள கோரையாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்தது. தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மழைக்காலங்களில் சேதமடைந்த பாலங்கள், சாலைகளை உடனடியாக சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் இங்கு புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இங்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது என்றார். அப்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ஜெயஸ்ரீ, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சங்கர், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், முகையூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் தனலட்சுமி, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் நாகராஜன், தன்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story