நீர்நிலைகளில் குவிந்த நாமக்கோழி பறவைகள்
ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளில் நாமக்கோழி பறவைகள் குவிந்துள்ளன.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளில் நாமக்கோழி பறவைகள் குவிந்துள்ளன.
சரணாலயங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலச்செல்வனூர், தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை, சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதுபோல் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களை தவிர மற்ற சரணாலயங்களில் அதிக அளவு தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான பறவைகள் திரும்பி சென்று விட்டன.
இந்த நிலையில் மேலச்செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய பறவைகள் சரணாலயங்களில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த சரணாலயங்களில் இருந்து ஏராளமான பறவைகள் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் முதல் மானாங்குடி மற்றும் நொச்சியூரணி வரையிலான நீர்நிலைகளில் குவிந்து உள்ளன.
நாமக்கோழி பறவைகள்
குறிப்பாக நாமக்கோழி பறவைகள், சிறிய வாத்துக்கள், சாம்பல் நிற நாரை மற்றும் ஏராளமான நீர் காகங்களும் குவிந்துள்ளன. இந்த நீர்நிலைகளில் குவிந்துள்ள நாமக்கோழி பறவைகள் தண்ணீரில் வேகமாக ஒன்றுசேர்ந்து பறப்பதும், கூட்டமாக தண்ணீரில் நீந்தியபடி இரை தேடுவதையும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சிறுவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
இது தவிர சிறிய வாத்துகளும் கடல் நீரில் நீந்தி வருவதோடு மட்டுமல்லாமல் வேகமாக கூட்டமாக அவ்வப்போது பறந்தும் செல்கின்றன. இந்தநிலைகளில் ஏராளமான நீர் காகங்களும் மற்றும் கொக்குகளும் அதிக அளவில் குவிந்துள்ளன.
Related Tags :
Next Story