விளையாட்டு வீரர்களுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகம்


விளையாட்டு வீரர்களுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 10 May 2022 7:34 PM GMT (Updated: 2022-05-11T01:04:13+05:30)

விளையாட்டு வீரர்களுக்காக புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கரூர், 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வசதியாக ஆடுகளும் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது இந்த செயலியில் விளையாட்டு வீரர்கள் தங்களது செல்போன் எண், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் ஆடுகளம் என்ற செல்போன் செயலியில் பதிவு செய்தால் மட்டுமே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற இயலும். மேலும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு சங்கத்தினர் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள பொதுமக்கள் அனைவரும் உடனே ஆடுகளம் செயலியை வரும் 19-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Next Story