எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி; கலெக்டர் வழங்கினார்


எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி; கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2022 9:28 PM GMT (Updated: 2022-05-11T02:58:59+05:30)

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை கலெக்டா் கிருஷ்ணனுண்ணி வழுங்கினாா்.

ஈரோடு
ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், ஈரோடு மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டு கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வரும் 124 குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் உதவிப்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவித்திட்ட பொருட்களை வழங்கினார். ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்வோர்க் திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, மாவட்ட திட்ட மேலாளர் பெ.துரைசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Next Story