நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் காலிக்குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு


நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் காலிக்குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2022 10:44 PM GMT (Updated: 10 May 2022 10:44 PM GMT)

நங்கவள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது காலிக்குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேச்சேரி, 
சாலைமறியல்
நங்கவள்ளி அருகே பெரிய சோரகை ஊராட்சி மாமரத்து மேடு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மாமரத்து மேடு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே அந்த பகுதி மக்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் நங்கவள்ளி- தாரமங்கலம் சாலையில் மாமரத்து மேடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து இருந்தனர். இந்த போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
குடிநீர் வினியோகம் சீரானது
தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழாய் உடைப்பு உடனே சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைதொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் நேற்று காலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story