பெங்களூருவில் போதைப்பொருள் விற்க முயன்ற 2 பேர் கைது
பெங்களூருவில் விற்க முயன்ற கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:
பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டல் முன்பாக 2 பேர் போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்திய போது, அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.
இவர்கள் 2 பேரும் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 200 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் மாரத்தஹள்ளி போலீசர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story