தர்மபுரியில், 13-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரியில், 13-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு பதிவு ரத்து செய்யப்படாது. அரசு துறை சார்ந்த பணிகளுக்கு அவர்களுடைய பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story