வாரச்சந்தையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல்


வாரச்சந்தையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2022 12:48 AM IST (Updated: 12 May 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

வாரச்சந்தையில் 25 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

காரைக்குடி,
காரைக்குடி அருகே புதுவயல் வாரச்சந்தையில் தரமற்ற முறையில் மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தியாகராஜன் தலைமையில் புதுவயல் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவி யாளர் மற்றும் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு சென்று தரமற்ற வகையில் விற்பனைக்காக வைக்கப் பட்டு இருந்த மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் சுமார் 25 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற மீன்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. 

Next Story