வீடு புகுந்து பெண் கொலை- போலீசார் வலைவீச்சு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 May 2022 3:53 PM IST (Updated: 12 May 2022 3:53 PM IST)
t-max-icont-min-icon

நாலாச்சோப்ராவில் வீடு புகுந்து பெண்ணை கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வசாய், 
  பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவை சேர்ந்தவர் மீனா நைக்(வயது 55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது உறவினரான நரேஷ் நைக் என்பவர் வந்தார். திடீரென தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால், மீனாவை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். 
  இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மீனா நைக் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற நரேஷ் நைக்கை தேடிவருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
1 More update

Next Story