அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை வழங்க வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அரசு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். வணிகவரித்துறை, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிவகாசி கிளையை சேர்ந்த சண்முகராஜ், வைரவன், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு பின்னர் வழக்கம்போல் பணிகளை செய்தனர். அப்போது அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.
Related Tags :
Next Story