ஸ்கூட்டர்-கார் மோதல்; முதியவர் பரிதாப சாவு


ஸ்கூட்டர்-கார் மோதல்; முதியவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

scooter-car collision; The old man died a miserable death

உடுப்பி:

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா கொத்தலகட்டே பகுதியை சேர்ந்தவர் பாரூக் (வயது 65). மீன் லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கொப்பலங்கடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த காரும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாரூக் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாரூக்கிற்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story