மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பிக்கள் சஸ்பெண்ட்


மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 26 July 2022 9:18 AM GMT (Updated: 26 July 2022 3:17 PM GMT)

மாநிலங்களவையில் இருந்து 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்றும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். இதனையடுத்து சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத் தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக மாநிலங்களவையில் இருந்து 6 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தி.மு.க.

எம்.எம். அப்துல்லா

எஸ். கல்யாணசுந்தரம்

ஆர். கிரிராஜன்

என்.ஆர். இளங்கோ

எம். சண்முகம்

கனிமொழி என்விஎன் சோமு

திரிணமூல் காங்கிரஸ்

சுஷ்மிதா தேவ்

மெளசம் நூர்

நதிமுல் ஹக்

சாந்தா சேட்ரி

டோலாசென்

சான்டனு சென்

அபி ரஞ்சன் பிஷ்வர்

தெலுங்கானா ராஷிஷிடிரிய சமிதி

லிங்கையா யாதவ்

ரவிஹாந்தரா வத்திராஜு

தாமோதர் ராவ்

இந்திய கம்யூனிஸ்ட்

பி.சந்தோஷ் குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

வி.சிவதாசன்

ஏ.ஏ. ரஹிம்

இவர்கள் 19 பேரும் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story