அமெரிக்காவில் புயல்: மோசமான வானிலையால் 1,500 விமானங்கள் ரத்து


அமெரிக்காவில் புயல்: மோசமான வானிலையால் 1,500 விமானங்கள் ரத்து
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வாஷிங்டன்,

வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலேண்ட் ஆகிய மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறின. மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது. எனவே 5½ கோடி மக்கள் வெள்ள கண்காணிப்பில் இருந்தனர்.

மேலும் இந்த புயல் காரணமாக பல இடங்களில் மிக மோசமான வானிலை நிலவியது. இதனால் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான கண்காணிப்பு நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story