மணிப்பூரில் பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த 2 முக்கிய நபர்கள் கைது
மணிப்பூர் மாநில காவல்துறை, என்.ஐ.ஏ. மற்றும் சி.ஆர்.பி.எப். ஆகியோர் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் 'ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(பி)' என்ற ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவரான தாக்சோம் தொய்பா என்பவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் மணிப்பூர் காவல்துறை, என்.ஐ.ஏ. மற்றும் சி.ஆர்.பி.எப். இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 'ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(பி)' அமைப்பின் தலைவர் தாக்சோம் தொய்பா மற்றும் அந்த அமைப்பின் கர்னலாக செயல்பட்டு வந்த லைமாயும் இங்பா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story