15-ந் தேதி சுதந்திர தின ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்பு; டி.கே.சிவக்குமார் பேட்டி


15-ந் தேதி சுதந்திர தின ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்பு; டி.கே.சிவக்குமார் பேட்டி
x

15-ந் தேதி சுதந்திர தின ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுதந்திரன தின பவள விழாவையொட்டி வருகிற 15-ந் தேதி காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் தேசிய கொடியுடன் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள். இதற்காக இதுவரை 62 ஆயிரத்து 394 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர். தினமும் 10 ஆயிரம் பேர் பெயர் பதிவு செய்கிறார்கள். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு ஊர்வலம் முடிவடைந்து வீட்டிற்கு செல்ல அனைவருக்கும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் எடுத்துள்ளோம். இந்த ஊர்வல விஷயத்தில் எங்களுக்கு அரசியல் முக்கியமல்ல. அரசியல் ரீதியாக பேச மாட்டோம். பிற கட்சிகளை விமர்சிக்க மாட்டோம். நாட்டின் வரலாற்றை நினைவு கூறும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் தேசிய கொடியை இலவசமாக தருகிறோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story