ஆந்திராவில் பத்திரிகையாளர் மீது சரமாறி தாக்குதல், யாரும் உதவ முன்வராத அவலம்


ஆந்திராவில் பத்திரிகையாளர் மீது சரமாறி தாக்குதல், யாரும் உதவ முன்வராத அவலம்
x
தினத்தந்தி 6 Feb 2017 3:26 PM GMT (Updated: 6 Feb 2017 3:26 PM GMT)

ஆந்திராவில் பத்திரிகையாளர் ஒருவரை சரமாரியாக எம்.எல்.ஏவின் சகோதர் தாக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


ஐதராபாத்:

ஆந்திர பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவரை எம்.எல்.ஏவின் சகோதரர் சரமாரியாக தாக்கிய போது அதை தடுக்க முன்வராமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- அமன்சி கிருஷ்ணா மோகன் என்பவர் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர். எம்.எல்.ஏ. கிருஷ்ணா மோகனும், அவரது சகோதரரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக அந்த பகுதியை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் நாகர்ஜுனா என்பவர் செய்தி வெளியிட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த  எம்.எல்.ஏ-வின் சகோதரர் சில அடியாட்களுடன் நகரின் மையப் பகுதியில் அந்த பத்திரிக்கையாளரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.பத்திரிக்கையாளர் தம்மை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது கேட்ட போது சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். யாரும் அவருக்கு உதவவில்லை.  மாறாக செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். பின்னர் அடிபட்ட பத்திரிக்கையாளர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

பத்திரிக்கையாளர் நாகர்ஜுனா தனது மகனுடன் கடைக்கு சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி போதும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story