அந்தமான், நிக்கோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


அந்தமான், நிக்கோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 14 March 2017 9:34 PM GMT (Updated: 14 March 2017 9:34 PM GMT)

அந்தமான் மற்றும் நிக்கோபரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

வங்காளவிரிகுடா பகுதியில் அமைந்திருக்கும் தீவுக்கூடங்களான அந்தமான் மற்றும் நிக்கோபரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.

காலை 8.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது. இருப்பினும் அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

இதேபோல் நேற்று காஷ்மீர் மாநிலத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கதுவா மாவட்டத்தை மையமாக கொண்டு அதிகாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.6 புள்ளிகளாக பதிவானது. 

Next Story