இஸ்ரேல் பிரதமர் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி


இஸ்ரேல் பிரதமர் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Jun 2017 5:45 PM GMT (Updated: 2017-06-28T23:15:37+05:30)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக பிரதமர் மோடி 4-ம் தேதி இஸ்ரேல் செல்கிறார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பெஞ்சமின் அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு செல்கிறார்.

இஸ்ரேல் நாட்டிற்கும் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். இஸ்ரேல் நாட்டில் ஹைபா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.

இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story