எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன்: பிரணாப் முகர்ஜி


எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன்:  பிரணாப் முகர்ஜி
x
தினத்தந்தி 24 July 2017 3:16 PM GMT (Updated: 2017-07-24T20:45:59+05:30)

எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன் என தனது உரையில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குடியரசு தலைவர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரணாப் முகர்ஜி உரையாற்றியுள்ளார்.

அவற்றில், ஜனாதிபதியாக கடந்த 5 வருடஙகளுக்கு முன் பதவியேற்கும்பொழுது, நமது அரசியலமைப்பினை பாதுகாப்பேன் என உறுதியளித்தேன்.

இந்த 5 வருடங்களில் ஒவ்வொரு நாளும் எனது கடமையில் கவனமுடன் இருந்தேன்.

சகிப்பு தன்மை மற்றும் பன்முகதன்மையில் நமது இந்தியாவின் ஆத்மா உறைந்துள்ளது.  பன்முக கலாசாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவை இந்தியாவை சிறப்படைய செய்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்று கொண்டேன்.

இந்திய மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக நான் ஆழ்ந்த நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.


Next Story