வோடாஃபோன் - ஐடியா இணைப்பிற்கு முக்கிய அனுமதி கிடைத்தது


வோடாஃபோன் - ஐடியா இணைப்பிற்கு முக்கிய அனுமதி கிடைத்தது
x
தினத்தந்தி 24 July 2017 3:51 PM GMT (Updated: 2017-07-24T21:20:47+05:30)

வோடாஃபோன் - ஐடியா நிறுவனங்களின் இணைப்பிற்கு தொழில் தாவாக்களை விசாரிக்கும் அமைப்பான காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவின் அனுமதி கிடைத்துள்ளது.

மும்பை

கடந்த மார்ச் மாதம் வோடாஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இணைந்து இந்தியாவின் பெரிய மொபைல் நிறுவனத்தைத் துவங்கின. ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கிய ஜியோ 4ஜிசேவையின் போட்டியை எதிர்கொள்ளவே இரண்டு நிறுவனங்களும் இணைந்தன. இரு நிறுவனங்களின் இணைப்பு 23 பில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இணைப்பின் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நிறுவனத்தை அவை துவக்கியுள்ளன என்று கூறப்பட்டது. தொழில் தாவா நிறுவனத்தின் அனுமதி இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இணைப்பிற்கு இன்னும் பல அமைப்புக்களின் அனுமதி தேவைப்படுகிறது. இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் மேலும் முதலீடுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story