பனாமா ஆவணங்களில் சத்தீஷ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் பெயரும் உள்ளது-ராகுல் காந்தி


பனாமா ஆவணங்களில் சத்தீஷ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் பெயரும் உள்ளது-ராகுல் காந்தி
x
தினத்தந்தி 29 July 2017 5:27 PM GMT (Updated: 2017-07-29T22:57:46+05:30)

பனாமா ஆவணங்களில் சத்தீஷ்கர் முதல்-மந்திரி ராமன் சிங் பெயரும் உள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜகதால்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் ஜகதால்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களில் அமைதி நிலவியது. வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். பனாமா ஆவணங்களில் முதல்-மந்திரி ராமன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் இருந்தும் பாஜக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.  ஊழல் குறித்து நீண்ட நேரம் உரையாற்றும்  பிரதமர் மோடிக்கு சத்தீஷ்கர் முதல்-மந்திரியின் ஊழல் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார்.Next Story