அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு


அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு
x
தினத்தந்தி 24 Aug 2017 5:51 AM GMT (Updated: 2017-08-24T11:21:26+05:30)

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபா நான்கு நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.  நேபாள பிரதமருக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த ஆலோசனையின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேபாள பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தனது முதல் வெளிநாட்டு பயணமாக தியூபா நேற்று  இந்தியா வந்தார். நேற்று நேபாள பிரதமருடன் திட்டமிடாமல் திடீரென பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இன்று இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். முன்னதாக ராஷ்டிரபதி பவனில் நேபாள பிரதமர் தியூபா கூறுகையில், நெருங்கிய நட்பு நாடான இந்தியா, நேபாள வளர்ச்சி பணிகளுக்கு உதவுவதாகவும் பிரதமர் மோடி மேலும் உதவ முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் தெரிவித்தார். 


Next Story