சினிமா பாணியில் பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் கைது


சினிமா பாணியில் பிச்சைக்காரரிடம் பணம் பறித்த போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2017 10:05 AM GMT (Updated: 2017-08-24T15:35:01+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையோர பிச்சைக்காரரிடம் இருந்து பணம் பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரத்தில் இருந்த பிச்சைக்காரரிடம் இருந்து போலீசார் ஒருவர் பணம் பறித்துள்ளார்.  இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து அவரை கைது செய்தனர்.

இது கேமிராவில் பதிவாகி அது சமூக வலைதளங்களிலும் பரவி அதிர்ச்சி மற்றும் பரபரப்பு கிளம்பியது.  கைது செய்யப்பட்ட முனாவர் உசைன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.  அவர் ஒரு தொடர் குடிகாரர்.  அதனால் கிஷ்த்வார் பகுதியில் இருந்து ராம்பன் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  கிஷ்த்வார் பகுதியில் உசைன் மீது 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அவரது கெட்ட பழக்கங்களை அடுத்து அவரது ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பிற பொருட்கள் உசைனின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டன.


Next Story