டோக்லாம் மோதல்: மோடிக்கு முலாயம் ஆதரவு


டோக்லாம் மோதல்: மோடிக்கு முலாயம் ஆதரவு
x
தினத்தந்தி 26 Aug 2017 3:16 PM GMT (Updated: 26 Aug 2017 3:16 PM GMT)

டோக்லாம் பகுதியில் சீனாவுடனான இந்தியா மோதல் விஷயத்தில் பிரதமர் மோடிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் முலாயம்சிங் யாதவ்.

லக்னோ

”சீனாவுடன் சண்டை வந்தால் மத்திய அரசை நான் ஆதரிப்பேன்” என்றார் முலாயம். ”சீனாவைப் பற்றி நான் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தேன். பாகிஸ்தானை விட சீனாதான் அதிக ஆபத்தானது. சீனா இப்படித்தான் நடந்து கொள்ளும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது” என்றும் அவர் கூறினார்,

செஞ்சீனப் படைகள் டோக்லாம் மோதலை முன்வைத்து இந்தியாவுடன் போர் புரிய முனைவதாக அவர் தெரிவித்தார். டோக்லாம் பகுதிக்கு நல்ல சாலை வசதி அமைக்கப்பட வேண்டும் என்றும் வட கிழக்கு பகுதியை சீனாவின் பிடிக்குள் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது பற்றி தான் நாடாளுமன்றத்தில் பேசியதையும் ஆனால் அரசு எல்லையிலுள்ள சூழ்நிலை பற்றி மக்களவைக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார் முலாயம்.

தனது சகாவான பகவதி சிங்கின் 85 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மட்டுமல்லாது முலாயம் சிங் யாதவ் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story