நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கியது


நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கியது
x
தினத்தந்தி 20 Sep 2017 7:56 AM GMT (Updated: 2017-09-20T13:25:58+05:30)

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவங்கியுள்ளது.

ஸ்ரீநகர்,


நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரம்சூ செக் டார் பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவை தொடந்து நேற்று காலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் 300 கி.மீ. நீளமுள்ள இச்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதி களுடன் இணைக்கிறது.

நிலச்சரிவை தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. சாலை சீரமைக்கப்பட்டதையடுத்து ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. 


Next Story