டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை


டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2017 12:27 PM GMT (Updated: 25 Sep 2017 12:27 PM GMT)

டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் என தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளது.


 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது தமிழக கடலோர பகுதிகள் பெரும் சேதமடைந்தன. பல ஆயிரம் உயிர்கள் கடல் நீருக்கு பலியாகின. இந்நிலையில், கேரளாவில் உள்ள பி. கே. ரிசர்ச் அசோசியோஷன் பார் இஎஸ்பி என்ற ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.  

  வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு கடல் எல்லைகள் மாறும்.

மேலும், பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும்.     அப்போது கடலில் 120-180 கி. மீ. வேகத்தில் காற்று வீசும்.

கனமழை பெய்யும். எனவே, முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Next Story