பீகாரில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை


பீகாரில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர்   தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-26T04:04:51+05:30)

பீகாரில் சக வீரரை சுட்டுக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா

பீகார் மாநிலம் தனபூர் முகாமில் ராணுவ வீரராக ரிங்கேஷ் (வயது 22) பணியாற்றினார். அருணாசல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றியவர் சந்தோஷ் (35). இருவரும் நண்பர்கள். 

இந்நிலையில் சந்தோஷ் விடுமுறையில் பீகார் வந்திருந்தார். அவரை சந்திக்க ரிங்கேஷ் சென்றார். ஆனால் அதன் பிறகு ரிங்கேஷ் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ரிங்கேஷ் உறவினர்கள் சந்தோஷ் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு ரிங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். மற்றொரு அறையில் சந்தோசும் பிணமாக இருந்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் தன்னுடைய உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு ரிங்கேசிடம் கூறியுள்ளார். 

அதற்கு ரிங்கேஷ் மறுப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிங்கேசை சுட்டுக்கொன்று விட்டு சந்தோஷ் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story