ஐகோர்ட் தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்- ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்


ஐகோர்ட்  தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்-  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 28 Oct 2017 11:37 AM GMT (Updated: 2017-10-28T17:07:04+05:30)

ஐகோர்ட் தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கூறினார்

கொச்சி

கேரள ஐகோர்ட்டின்  வைர விழாகொண்டாட்டங்களை தொடங்கி வைத்த ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்  பேசியதாவது:-

ஐகோர்ட்டின் தீர்ப்புகளின் மொழிமாற்றம் செய்யபட்ட பிரதிகளை  தீர்ப்புவழங்கிய 24 மற்றும் 36 மணிநேரங்களில் வழங்கலாம்.

ஐகோர்ட்டுகள் ஆங்கிலத்தில் தீர்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் நாம் வெவ்வேறு மொழிகளில் உள்ள ஒரு நாடு. வழக்கு தொடுத்தவர்  ஆங்கிலம் படித்துப் இருக்க முடியாது. தீர்ப்பின் சிறப்பம்சங்கள் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. வழக்கு தொடுப்பவர் வக்கீல் மற்றும் மற்றவர்களை  சார்ந்து இருக்க வேண்டிய  நிலை உள்ளது. இது நேரம் மற்றும் பணசெலவு அதிகமாக்கும்.

மக்களுக்கு நீதி வழங்குவது மட்டும் முக்கியம் அல்ல, அவர்கள் அறிந்த ஒரு மொழியில்  வழக்கு தொடுப்பவர் அதனை  புரிந்து கொள்ள வேண்டும் . நாட்டில் நீதி வழங்கல் தாமதமாவது  மிகப்பெரிய கவலை அளிப்பதாக உள்ளது.

பெரும்பாலும், பாதிக்கப்படுபவர்கள் நம் சமுதாயத்தில் மிகவும் ஏழைகளாகவும், மிகவும் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு  வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,கேரள கவரனர் பி.சதாசிவம், முதல் மந்திரி பினராய் விஜயன், கேரள ஐகோர்ட் தலைமை  நீதிபதி நவநிதி பிரசாத் சிங், மத்திய சட்டத்துறை   அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story