கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்


கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 29 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-30T00:01:41+05:30)

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு நேற்று கொலை மிரட்டல் வந்தது.

திருவனந்தபுரம்,

திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தை சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு ‘பினராயி விஜயன் உயிருக்கு குறி வைப்போம்’ என்று மர்ம நபர் ஒருவர் எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார்.

அப்போது, பினராயி விஜயன், பக்கத்து மாவட்டமான பாலக்காட்டில் இருந்தார். கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காணும் பணியில் சைபர் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story