எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் சண்டை; 7 பாக். வீரர்கள் உயிரிழப்பு


எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் சண்டை; 7 பாக். வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Jan 2018 9:41 AM GMT (Updated: 15 Jan 2018 9:41 AM GMT)

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். #IndianArmy #Pakistan


ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மெந்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. எல்லையில் அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். இன்றும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் அடாவடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 7 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்தனர் என தெரியவந்து உள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் 4 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்லையில் இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு அன்று ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சுந்தர்பானி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 

Next Story