தேசிய செய்திகள்

போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது - ஜெட்லி சொல்கிறார் + "||" + Congress compromising on national security by demanding Rafale deal details Jaitley

போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது - ஜெட்லி சொல்கிறார்

போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது - ஜெட்லி சொல்கிறார்
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது என ஜெட்லி கூறிஉள்ளார்.

புதுடெல்லி,


இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு நடைபெற்ற பேரத்தில் ஊழல் நடந்து உள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டதை
அடுத்து ரபேல் போர் விமான ஒப்பந்தம், காங்கிரஸ் அரசால் பேசப்பட்டதை விட சிறந்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தொடர்ச்சியாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை கேட்டு காங்கிரஸ் தேச பாதுகாப்பை சமரசம் செய்கிறது என ஜெட்லி கூறிஉள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது ஏகே அந்தோணி, பிரணாப் முகர்ஜி பாதுகாப்பு மந்திரியாக இருந்தனர், ஆனால் அவர்கள் இதுபோன்ற ஒப்பந்தங்கள் தொடர்பான தொகை விபரங்களை வெளியிடவில்லை. ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும்போது, ஆயுதத்தின் கட்டமைப்பையும் வெளியிட வேண்டியது இருக்கும். ஒப்பந்த விவகாரத்துடன் பாதுகாப்பு விஷயம் அடங்கியது.

ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை வெளியிடும் போது, அதுதொடர்பான குறிப்பிட்ட முக்கியமான தகவல்களும் வெளியே கசிய நேரிடும். பொது இடத்தில் ஒப்பந்தம் தொடர்பான தகவலை வெளியிட வலியுறுத்தி தேச பாதுகாப்பை காங்கிரஸ் சமரசம் செய்கிறது என குற்றம் சாட்டிஉள்ளார் ஜெட்லி.

இவ்விவகாரம் தொடர்பாக செவ்வாய் அன்று நிர்மலா சீதாராமன் பதிலளிக்க மறுத்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டரில், “பாதுகாப்பு மந்திரி விலை தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை ரகசியம் என குறிப்பிட்டு உள்ளார். பாராளுமன்றத்தில் விலை தொடர்பாக தகவல் தெரிவிப்பது தேச பாதுகாப்பிற்கு எச்சரிகையானது கிடையாது. கேள்வி கேட்பவர்கள் எல்லோரையும் ஆன்டி-இந்தியன் என முத்திரை குத்துகிறார்கள்,” என விமர்சனம் செய்யப்பட்டது.

ராகுல் காந்தி பேசுகையில் “ரபேல் போர் விமானம் வாங்க கொடுக்கப்பட்ட தொகையை தெரிவிக்க மாட்டோம் என பாதுகாப்பு மந்திரி கூறுகிறார். இதனுடைய பொருள் என்ன? அங்கு ஊழல் நடந்து உள்ளது என்பதுதான் பொருள். 

மோடி ஜி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்று ஒப்பந்தத்தை மாற்றிவிட்டார். இதனை ஒட்டுமொத்த தேசமும் அறியும்,” என குற்றம் சாட்டியிருந்தார். காங்கிரஸ் தன்னுடைய குற்றச்சாட்டில் ஸ்திரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.