தேசிய செய்திகள்

மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு + "||" + RSS People in Every Ministry Running Modi Govt Rahul Gandhi in Karnataka

மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு

மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ராகுல் ‘பகீர்’ குற்றச்சாட்டு
மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நியமனம் செய்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். #Tamilnews

பெங்களூரு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். பிரதமர் மோடி, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்ட ராகுல் காந்தி இப்போது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சாட்டிஉள்ளார். 

மத்திய அரசின் அனைத்து அமைச்சகத்தின் செயலாளர்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நியமனம் செய்கிறது என ராகுல் காந்தி கூறி உள்ளார். 

கர்நாடகாவில் தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்படுத்துகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்று உள்ளனர். மத்திய அரசின் எல்லா அமைச்சகத்திலும் செயலாளர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாலே நியமனம் செய்யப்படுகிறது,” என குற்றம் சாட்டினார். நிதி அயோக்கில் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்று உள்ளனர். “நிதி அயோக் அமைப்பு எந்தஒரு அரசியல் கட்சியையும், கொள்கையையும் சாராதது. அங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய நபரை நியமனம் செய்து உள்ளது. எல்லா இடத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உள்ளனர். 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மோசமான குளறுபடி தொடர்கிறது. நம்முடைய அனைத்து அண்டைய நாடுகளுடனும் சீனா செல்வாக்கை கொண்டிருக்கிறது. இந்தியாதான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது,” என ராகுல் காந்தி பேசுகையில் குறிப்பிட்டார். 

மத்தியில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்வோம். இப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அதிகமான வரி விதிப்பு காணப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்படும் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.