தேசிய செய்திகள்

”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது + "||" + I Will Die Anyway, So I'm Killing You,' Man Tells Passenger Before Kicking Him Out of Train

”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது

”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர் கைது
”நான் எப்படியும் இறக்க போகிறேன், எனவே நீயும் இறந்து விடு” என கூறி சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போபால், 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எந்த முன்விரோதமும் இன்றி, சக பயணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்தசம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- “ போபால் அருகே சுகி சேவானியா ரயில் நிலையம் அருகே கம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் பொதுப்பெட்டியில் வாசல் அருகே அமர்ந்த படி ரிதேஷ் என்ற இளைஞர் தனது உறவினர் ஒருவருடன் போபாலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்து கொண்டு இருந்தார். 

அப்போது, கழிவறையில் இருந்து வந்த ரஜ்மல் பால் அகா ராஜூ (வயது 27) என்ற இளைஞர், நான் எப்படியும் இறக்க போகிறேன். அதனால், நீயும் இறந்து போ” என கூறிய படி ரயிலின் வாசல் அருகே அமர்ந்து இருந்த ரிதேஷை எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறிய சிதேஷ் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இதைக்கவனித்த சக பயணிகள் திடுக்கிட்டுள்ளனர். ஏனெனில் எந்த முன்விரோதமும் இன்றி சக பயணியை தள்ளிவிட்டு கொலை செய்தது அங்கிருந்தவர்களை  அதிர்ச்சியில் உறையச்செய்தது. இந்த சம்பவம் பற்றி சக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில், விரைந்து வந்த ரயில்வே போலீசார், அப்பாவி இளைஞரை தள்ளி விட்டு கொலை செய்த ராஜூ என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.