தேசிய செய்திகள்

'பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாதவர்கள் பாகிஸ்தானியர்கள் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சு + "||" + Those who don t say Bharat Mata ki Jai are Pakistanis UP BJP MLA

'பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாதவர்கள் பாகிஸ்தானியர்கள் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சு

'பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாதவர்கள் பாகிஸ்தானியர்கள் - பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சு
'பாரத் மாதா கி ஜே' கோஷம் போடாதவர்கள் பாகிஸ்தானியர்கள் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசி உள்ளார். #BJP
லக்னோ, 

இந்தியா 2024-ல் இந்து தேசமாகும் என அறிவித்த நிலையில் உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், 'பாரத் மாதா கி ஜே' கோஷம் எழுப்ப தயக்கம் காட்டுபவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களே என பேசி உள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் ராத்சாத் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சுரேந்திர சிங், இது போன்றவர்களை அரசியல் களமிறங்க அனுமதிக்க கூடாது எனவும் பேசி உள்ளார். 

சுரேந்திர சிங் பேசுகையில், “பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம்,” கோஷம் எழுப்ப தயக்கம் காட்டுபவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள், அவர்களுக்கு இந்த தேசத்தில் இருப்பதற்கு உரிமை கிடையாது. தாய் திருநாட்டிற்கு தாய்க்கான மதிப்பை கொடுக்காத அவர்களின் தேசப்பற்று சந்தேகத்திற்குரியது. எனவே  “பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம்,” கோஷம் எழுப்புவதில் பிரச்சனை கொண்டிருப்பவர்களை அரசியலில் இறங்க அனுமதிக்க கூடாது,” என கூறி உள்ளார். 

கடந்த மாதம் சுதேந்திர சிங் இந்தியா 2024-ல் இந்து தேசமாகும் என பேசியது தலைப்பு செய்தியாகியது.

சட்டவிரோதமான குவாரிகள் விவகாரம் தொடர்பாக பேசிய சுரேந்திர சிங், “சுய தேவைக்காக மணல் எடுப்பதை தடுத்து நிறுத்தினால் போலீசாருக்கு இரண்டு அறைவிடுங்கள்,” என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.