தேசிய செய்திகள்

அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பம் - சோனியா காந்தி + "||" + It s her choice Sonia Gandhi on daughter Priyanka joining politics

அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பம் - சோனியா காந்தி

அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பம் - சோனியா காந்தி
அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பமாகும் என சோனியா காந்தி கூறிஉள்ளார். #SoniaGandhi #PriyankaGandhi
புதுடெல்லி,

2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தேர்தல்களில் தோல்வியை தழுவும் போது எல்லாம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையானது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பதில் அளித்து பேசிஉள்ளார். மும்பையில் நடைபெறும் இந்தியா டுடே கன்கிளேவ் 2018-ல் பங்கேற்ற சோனியா காந்தி,  “எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பது தொடர்பாக பிரியங்கா காந்திதான் முடிவு செய்ய வேண்டும்,” என்றார். பிரியங்காவின் குழந்தைகள் தேர்வுகளை எழுதுகிறார்கள், அவர்கள் படிப்பை முடிக்கவேண்டும். எப்போது முழுநேர அரசியலில் ஈடுபட முடியும் என்பது தொடர்பாக பிரியங்காதான் முடிவு செய்ய வேண்டும் என கூறிஉள்ளார் சோனியா காந்தி.