அரியானாவில் கிராமப்புற பள்ளி மாணவர்களில் 25% புகையிலை பழக்கத்திற்கு அடிமை; ஆய்வில் தகவல்


அரியானாவில் கிராமப்புற பள்ளி மாணவர்களில் 25% புகையிலை பழக்கத்திற்கு அடிமை; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 19 March 2018 4:22 PM GMT (Updated: 19 March 2018 4:22 PM GMT)

அரியானாவில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் நடந்த ஆய்வு ஒன்றில் 25 சதவீத மாணவர்கள் புகையிலை சுவைக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. #TobaccoChewing

சண்டிகார்,

அரியானாவில் பஞ்ச்குலா மாவட்டத்தின் சில கிராமப்புற பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,500 மாணவர்களிடம் ஆய்வு ஒன்று நடந்தது.

இதில் 25 சதவீதத்தினர்புகையிலையைபயன்படுத்துவதுதெரியவந்துள்ளது.  அவர்களில் 8 வயதுஇளம்சிறுவர்களும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ஆய்வு நடத்திய மாணவர்களிடம் பேசும்பொழுது, அதிக அழுத்தம் காரணம் என சிலர் கூறியுள்ளனர்.  தங்களது பெற்றோர் அல்லது உறவினர்களுக்காக இதனை வாங்கினோம்.  அதனை பரிசோதனை செய்வோம் என சுவைத்து பின் பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டோம் என சிலர் கூறியுள்ளனர்.

இதில், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இதன் தீங்கு தரும் விளைவுகள் பற்றி தெரியும்.  ஆனால், அதற்கு கீழ் வயது உள்ளோருக்கு அதுபற்றிய விழிப்புணர்வு இல்லை என தெரிய வந்துள்ளது.


Next Story