தேசிய செய்திகள்

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோ காட்சியை வெளியிட்ட காங்கிரஸ் + "||" + Congress others tweet photo clips of Narendra Modi with Asaram after latter found guilty of raping minor

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோ காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோ காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்
பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி இருக்கும் பழைய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. #Congress #Asaram #PMModi

புதுடெல்லி,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து  உத்தரவிட்டது. அவருடைய ஆதரவாளர்களால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை வெளியிட்டதை அடுத்து வடமாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகிறார்கள். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி இருக்கும் பழையை வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. "ஒரு மனிதன் அவர் வைத்திருக்கும் நட்பால் அறியப்படுகிறார்" என்ற வாசகத்துடன் காங்கிரஸ் கட்சி பழையை வீடியோவை வெளியிட்டு உள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவின் கைகளை பிடித்துக்கொண்டு மோடி ஆசிர்வாதம் பெறுவது, அவர் குறித்து பேசுவது தொடர்பான காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சியின் டுவிட் காரணமாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ்- பாரதீய ஜனதாவினர் இடையே வாக்குவாதம் நேரிட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சாமியார் ஆசாராம் பாபுவை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களை பாரதீய ஜனதாவினர் வெளியிட்டு வருகிறார்கள். 

ஆசாராம் பாபுவிடம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ஆசிர்வாதம் பெறும் காட்சிகளும் டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுபோன்று பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனம் செய்வதையும் சமூக வலைதள பயனாளர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.