சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை- மதசார்பற்ற ஜனதா தளம்


சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை- மதசார்பற்ற ஜனதா தளம்
x
தினத்தந்தி 26 April 2018 11:15 AM GMT (Updated: 26 April 2018 11:15 AM GMT)

சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து சித்தராமையா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி. தேவேகவுடா கூறியுள்ளார். #Siddharamaiah

பெங்களூர்,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் முடிவுகள் மே 15-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.   இந்தநிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும்,  பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவ் கவுடா   சித்தராமையாவுக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில்  ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவ் கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாமுண்டீஸ்வரி தொகுதியில்  இருந்து சித்தராமையா தேர்ந்து எடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தான் பாதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது.  

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.  நான் 100 சதவீதம் எனது தொகுதியில் வெற்றிப்பெறுவேன். காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. மக்கள் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story