சர்ச்சை கருத்துக்களால் அதிருப்தி: திரிபுரா முதல் மந்திரிக்கு மோடி அழைப்பு


சர்ச்சை கருத்துக்களால் அதிருப்தி: திரிபுரா முதல் மந்திரிக்கு மோடி அழைப்பு
x
தினத்தந்தி 30 April 2018 1:58 AM GMT (Updated: 2018-04-30T07:28:22+05:30)

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் குமாரை, டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. #PmModi #BJP

புதுடெல்லி,

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் குமாரை, டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. 

திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மகாபாரத காலத்திலேயே இணையதளம் வசதிகளும், செயற்கைக்கோள் தொடர்புகளும் இருந்தன;படித்த இளைஞர்கள், அரசு வேலை கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பீடா கடை வைத்து பிழைக்கலாம்;மாடு மேய்க்கும் தொழிலில் இளைஞர்கள் ஈடுபடலாம்என்று அவர் அடுத்தடுத்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. 

இதேபோல், 1997-இல் உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹேடன் குறித்து அவர் கூறிய கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மே மாதம் 2-ஆம் தேதி டெல்லி வந்து மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி பிப்லப் குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, பிப்லப் குமாரை இருவரும் கண்டிப்பார்கள் என்று தெரிகிறது.


Next Story