தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 May 2018 7:32 AM GMT (Updated: 10 May 2018 7:33 AM GMT)

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.

புதுடெல்லி 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

இன்று மேற்கு வங்களம், சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில்  இருக்கும். இதனால், இடி,மின்னலுடன் பெரும் கனமழை பெய்யக்கூடும். இதே நிலை ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் நீடிக்கும். ராஜஸ்தானில் புழுதி புயல் ஏற்படும். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, அசாம், மேகலாயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கடற்கரை ஒட்டியுள்ள கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள தகவலில் 

தென் தமிழகம், வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிக அளவில் பெய்துள்ளது
அதிகபட்சமாக கொடைக்கானலில் 11, வால்பாறையில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. என கூறி உள்ளது


Next Story