தேசிய செய்திகள்

2 நாள் அரசு முறைப்பயணமாக இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi's Nepal visit aimed at healing old wounds, building trust

2 நாள் அரசு முறைப்பயணமாக இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி

2 நாள் அரசு முறைப்பயணமாக இன்று நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி
2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி, இன்று நேபாளம் செல்கிறார். #PmModi #NepalVisit
புதுடெல்லி,

இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று நேபாளம் செல்கிறார். நேபாள நாட்டு பிரதமர் கேபி ஒலி சர்மா அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கே நேரடியாக  பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து முக்திநாத் புறப்படும் மோடி, அதற்கு முன்பாக சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபடுகிறார். 

முக்திநாத்தில் இருந்து காத்மாண்டு செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச உள்ளார்.  மூன்று ஆண்டுகளில், பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு நேரடி பேருந்து சேவை மற்றும் ஹைட்ரோ மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றையும்  பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். 


ஆசிரியரின் தேர்வுகள்...