தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 5 மாணவர்கள் உயிரிழப்பு, 20 பேர் மாயம் + "||" + Five students killed, 20 missing as bridge collapses in PoK

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 5 மாணவர்கள் உயிரிழப்பு, 20 பேர் மாயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலம் இடிந்ததில் 5 மாணவர்கள் உயிரிழப்பு, 20 பேர் மாயம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர், 20 பேர் மாயமாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆற்றின் குறுக்கே போடப்பட்டு இருந்த மரப்பாலம் மீது மாணவர்கள் மொத்தமாக நின்று புகைப்படம் எடுத்து உள்ளனர். அப்போது பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர் என்றும் 10 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லாகூர் மற்றும் பைசாலாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சென்ற போது ஜீலம் ஆற்றில் மரப்பாலம் மீது நின்று புகைப்படம் எடுக்க முயன்று உள்ளனர். அப்போது பாரம் தாங்காமல் விபத்து நேரிட்டு உள்ளது என உள்ளூர் மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.