கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை


கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை
x
தினத்தந்தி 21 May 2018 9:53 AM GMT (Updated: 21 May 2018 9:53 AM GMT)

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து உள்ளது, வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. #Nipah


திருவனந்தபுரம், 


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 10 பேர் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே வைரஸ் பரவல் அச்சம் அங்கு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலத்தை நிர்வாகம் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை, மாறாக மின்மயானத்தில் வைத்து சுகாதாரத்துறை தரப்பிலே எரிக்கப்பட்டு உள்ளது. வைரஸ் பரவல் தடுப்பை உறுதிசெய்யும் வகையில் அரசு நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சங்காரோத் பகுதியில் உயிரிழந்த சகோதரர்கள் இறுதிசடங்கில் கலந்துக்கொண்ட ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story