தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மகளின் எச்சரிக்கை உண்மையானது, சமூக வலைதளங்களில் மார்பிங் போட்டோ வைரல் + "||" + Morphed photo of Pranab in RSS style salute goes viral, daughter says told you so

பிரணாப் முகர்ஜி மகளின் எச்சரிக்கை உண்மையானது, சமூக வலைதளங்களில் மார்பிங் போட்டோ வைரல்

பிரணாப் முகர்ஜி மகளின் எச்சரிக்கை உண்மையானது, சமூக வலைதளங்களில் மார்பிங் போட்டோ வைரல்
பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். போன்று சல்யூட் செய்யும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #PranabMukherjee #RSS

புதுடெல்லி,


மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பையும் மீறி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக நேற்று கலந்துக்கொண்டார். விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி ‘பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும்தான் இந்தியாவின் ஆத்மா’ என்று விளக்கம் கொடுத்து பேசினார். இந்நிலையில் அவர்  ஆர்.எஸ்.எஸ். போன்று சல்யூட் செய்யும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பிற அதிகாரிகள் அணிந்து இருந்த கருப்பு நிற தொப்பியை பிரணாப் முகர்ஜியும் அணிந்து இருந்ததாக மார்பிங் செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று அவர் மார்பு பகுதியில் கையை உயர்த்தி ஆர்.எஸ்.எஸ். போன்று சலுயூட் செய்வது போன்றும் போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டு உள்ளது. உண்மையில் விழாவில் கலந்துக்கொண்ட பிரணாப் முகர்ஜி கருப்பு நிற தொப்பியும் அணியவில்லை, ஆர்.எஸ்.எஸ். போன்று சலுயூட் செய்யவுமில்லை. 

சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் பரவிவரும் நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி, உண்மையில் நான் அச்சம் அடைந்தது இதுதான், என்னுடைய தந்தையை இதற்காகதான் எச்சரித்தேன். சில மணி நேரங்கள் கடந்த நிலையிலே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோசமான சூழ்ச்சி துறையானது முழு பணியை தொடங்கி உள்ளது,” என கூறிஉள்ளார். 

நேற்று பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக எச்சரிக்கைவிடுத்த சர்மிஸ்தா முகர்ஜி, பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும். அதனால் தான் நீங்கள் அங்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கெனவே சில வதந்திகள் கிளம்பி விடப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில வதந்திகளும் வரலாம். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக வதந்தி கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் நான் அரசியலிலேயே இருக்கிறேன்.

 அப்படி காங்கிரஸை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பிற கட்சியினரை விமர்சனம் செய்ய வைக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan
2. ரபேல் விவகாரம்: விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது.
3. பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது
மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
5. 300 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம்; ராகுல் அமேதி தொகுதியைவிட்டு வெளியேறுவார் - பா.ஜனதா கணிப்பு
காவி கட்சியின் அலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய தொகுதியை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளும் என பா.ஜனதா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.