ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: அரியானா மாணவர் முதல் இடம்


ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: அரியானா மாணவர் முதல் இடம்
x
தினத்தந்தி 10 Jun 2018 11:15 PM GMT (Updated: 10 Jun 2018 9:36 PM GMT)

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் அரியானாவைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘ஜே.இ.இ. அட்வான்ஸ்டு’ என்னும் மேம்பட்ட கூட்டு நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 20-ந் தேதி நடைபெற்றது. முதல் முதலாக ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதினர்.

இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்த பிரணவ் கோயல் என்ற மாணவர் 360-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். ராஜஸ்தானை சேர்ந்த மீனாள் பராக் என்ற மாணவி 318 மதிப்பெண்கள் எடுத்து மாணவிகளில் முதல் இடம் பெற்றார்.

மாணவர்கள் இந்த தேர்வு முடிவினை அதிகாரபூர்வ இணையதளமான je-e-a-dv.ac.in -ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். செல்போனில் பதிவு செய்தவர்கள், தேர்வு முடிவை குறுந்தகவல் மூலம் அறியலாம்.

வரும் 15-ந் தேதி முதல் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 279 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 18 ஆயிரத்து 138 பேர் தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story