இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை, போலீஸ் விசாரணை


இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை, போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 Jun 2018 7:34 AM GMT (Updated: 19 Jun 2018 7:34 AM GMT)

ஒடிசாவில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ. 45 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியது.



புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் இன்று காலை 10:30 மணிக்கு துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் வங்கியை கொள்ளையடித்தது. வங்கியில் இருந்த ரூ. 45 லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டது. ஆயுதம் தாங்கிய கும்பலில் 7 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவும், போலீசார் விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டார்கள். அவர்கள் வங்கி பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்கிறார்கள். 

இதற்கிடையே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது, கொள்ளையர்கள் தப்பிவிடாத வண்ணம் நகரை சுற்றிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய கும்பல் வங்கியில் கொள்ளையடித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்கள் தங்களுடைய முகத்தை தலைகவசம் அணிந்து மறைத்து இருந்ததால் அவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. 

இதற்கிடையே அண்டைய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. 

Next Story