காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் வன்முறை வளர பாரதீய ஜனதா கட்சி அனுமதித்துள்ளது; உமர் அப்துல்லா


காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் வன்முறை வளர பாரதீய ஜனதா கட்சி அனுமதித்துள்ளது; உமர் அப்துல்லா
x
தினத்தந்தி 23 Jun 2018 5:57 AM GMT (Updated: 23 Jun 2018 5:57 AM GMT)

காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் வன்முறை வளர பாரதீய ஜனதா கட்சி அனுமதித்துள்ளது என உமர் அப்துல்லா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். #OmarAbdullah

ஸ்ரீநகர்,

மத்திய சட்ட துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேசும்பொழுது, பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதிகள் அதிக அளவில் சுட்டு கொல்லப்பட்டனர் என கூறினார்.

காஷ்மீரில் 2012ல் 72 தீவிரவாதிகளும், 2013ல் 67 தீவிரவாதிகளும், 2014ல் 110 தீவிரவாதிகளும். 2015ல் 108 தீவிரவாதிகளும். 2016ல் 150 தீவிரவாதிகளும், 2017ல் 217 தீவிரவாதிகளும் மற்றும் 2018ல் இதுவரை 75 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுவே காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி அரசுகளால் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும் என பிரசாத் கூறியுள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சர் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா கூறும்பொழுது, இதனை கூறுவதற்கு பிரசாத் சங்கடப்பட வேண்டும்.  இதனை சாதனைகளில் ஒன்றாக கூற முடியாது என கூறியுள்ளார்.

தொடர்ந்து உமர் பேசும்பொழுது, உண்மையில் உங்களது அரசு காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் வன்முறை வளர அனுமதித்துள்ளது.  அதனால் அதிக அளவிலான தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்பதனையே உங்களது பேச்சு காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற புள்ளி விவரங்களை தெரிவிப்பதற்கு நீங்கள் சங்கடப்பட வேண்டும்.  இதனை எல்லாம் சாதனையாக கூற கூடாது என தெரிவித்துள்ளார்.


Next Story