தேசிய செய்திகள்

ஒரு பழம் விலை ரூ.1,500; அரசர்கள் மட்டும் சாப்பிடும் மாம்பழ ரகம்: புவிசார் குறியீடு கோரும் மேற்கு வங்காள அரசு + "||" + WB govt wants GI tag for Kohitur mango, royal among king of fruits

ஒரு பழம் விலை ரூ.1,500; அரசர்கள் மட்டும் சாப்பிடும் மாம்பழ ரகம்: புவிசார் குறியீடு கோரும் மேற்கு வங்காள அரசு

ஒரு பழம் விலை ரூ.1,500; அரசர்கள் மட்டும் சாப்பிடும் மாம்பழ ரகம்:  புவிசார் குறியீடு கோரும் மேற்கு வங்காள அரசு
அரச பரம்பரையினர் சாப்பிடும் கோஹிதூர் ரக மாம்பழத்திற்கு மேற்கு வங்காள அரசு புவிசார் குறியீடு கோரியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நவாப் மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசராக இருந்தவர் சிராஜ் உத் தவுலா.  மேற்கு வங்காளத்தில் கடைசி நவாப் மன்னராக இருந்த  இவர் அரச பரம்பரையினர் சாப்பிடுவதற்காகவே மாம்பழ ரகம் ஒன்றை உருவாக்கினார்.

மேற்கு வங்காளத்தின் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்ட கோஹிதூர் மாம்பழம் என்ற பெயரிடப்பட்ட விலை மதிப்பற்ற இந்த ரகம் மிக மென்மையாக இருக்கும்.  முழுவதும் பழுத்த பழங்களை கவனமுடன் மரத்தில் இருந்து கையால் பறித்து அதனை பருத்தி துணியால் சுற்றி வைக்க வேண்டும்.

இந்த பழம் மரத்தில் இருந்து விழுந்து விட்டாலோ அல்லது சரியாக கையாளவில்லை என்றாலோ அழுக தொடங்கி விடும்.

கோஹிதூர் பழங்களை உலோகங்களுக்கு பதிலாக மூங்கிலால் செய்யப்பட்ட கத்திகளை பயன்படுத்தி நறுக்கினால் அதன் உண்மையான நறுமணமும் மற்றும் சுவையும் கிடைக்க பெறும்.  இதனை நவாப்கள் தேனில் வைத்து அதிக நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த மரங்களை பொதுமக்கள் வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது.  அரசர்களின் தோட்டங்களிலேயே வளர்க்கப்பட்டு அரச குடும்பத்தினரே சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில், மூர்ஷிதாபாத்தில் 25 முதல் 30 கோஹிதூர் மரங்களே உள்ளன.  அவற்றில் சில மரங்கள் 150 வருடங்கள் பழமை வாய்ந்தவை.  ஒரு சீசனில் மரமொன்று 40 பழங்களுக்கு மேல் விளைச்சல் தராது.  ஒவ்வொரு வருடமும் மரங்கள் விளைச்சலை தருவதும் இல்லை.

இது வர்த்தக ரீதியில் அதில பலன் தர கூடியது இல்லை.  ஆனால் ஒரு பழம் ரூ.500க்கு மேல் விற்கப்படும்பொழுது அது வளர்ப்போருக்கு லாபம் தருகிறது.  கடந்த சீசனில் கொல்கத்தாவில் ஒரு மாம்பழம் ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது.