தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை + "||" + Militant killed in encounter with security forces in Kupwara: Police

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #KashmirEncounter
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹாண்ட்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை குறி வைத்து என்கவுண்டர் நடத்தினர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதலில் ஈடுபட அதிகாலை வரை சண்டை நீடித்தது.

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தீவிரவாதிகளை ஒடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

ஆசிரியரின் தேர்வுகள்...