தேசிய செய்திகள்

ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு + "||" + The case of claiming homosexuality to be criminal

ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு

ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கு: ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு
ஓரின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவிக்கக்கோரும் வழக்கை அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377–வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது.

377–வது சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பிரமாண மனுவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு எங்கள் முடிவுக்கு விட்டு விட்டாலும், 377–வது சட்டப்பிரிவின் செல்லும்தன்மையை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், 377–வது பிரிவை நீக்கும்போது, ஓரின சேர்க்கையாளர்கள் மீதான சமூக களங்கமும், பாரபட்சமும் அகலும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை 17–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.